ADDED : பிப் 05, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை குழுவினர் சார்பில், மாதந்தோறும் ஒரு கோவிலில் உழவாரப் பணி மேற்கொள்கின்றனர்.
அதன்படி பிப்., மாத உழவாரப் பணியாக, காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள அரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர்.
இதில், கோவில் வளாகத்தில் புதர்போல் மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றினர். தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர்.

