தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிளஸ் 2 மாணவரின் கண்கள் தானம்

 பிளஸ் 2 மாணவரின் கண்கள் தானம்

 பிளஸ் 2 மாணவரின் கண்கள் தானம்


ADDED : ஏப் 09, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:மின்னல் தாக்கி இறந்த பிளஸ் 2 மாணவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி-புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் விஸ்வநாதன், 17. பிளஸ் 2 பொது தேர்வு எழுதி உள்ளான்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தந்தைக்கு உதவியாக வைக்கோல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது, மின்னல் தாக்கியதில், விஸ்வநாதன் மயங்கி விழுந்தான். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலமாக, காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நேற்று, அவரது குடும்பத்தினர், விஸ்வநாதனின் கண்ணை தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, காஞ்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us