/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
/
பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
ADDED : ஜன 03, 2024 10:03 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இம்மாதம் 9ம் தேதி, 2023- - 24ம் ஆண்டுக்கான போட்டிகள், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், 10ம் தேதி நடைபெற உள்ளன.
போட்டி நடைபெறும் நாளில், மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ - மாணவியர் தலைமையாசிரியரிடமும், கல்லுாரி மாணவர்கள் கல்லுாரி முதல்வரிடமும் பரிந்துரை கடிதம் பெற்று, போட்டியில் பங்கேற்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.