ADDED : நவ 26, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கம்பன் கழகம் சார்பில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளி கலை அரங்கில் நடந்த 'காஞ்சி தமிழோசை' கவிதை நுால் வெளியீட்டு விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி., பள்ளி செயலர் ராமன் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் சுப்பிர மணியன், மருத்துவர் குக ரமணன், முத்துராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 'காஞ்சி தமிழோசை' என்ற கவிதை நுாலை, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார்.

