/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.ஒரு கோடி யானை தந்தம் பறிமுதல் காரை துரத்தி மடக்கிய போலீசார்
/
ரூ.ஒரு கோடி யானை தந்தம் பறிமுதல் காரை துரத்தி மடக்கிய போலீசார்
ரூ.ஒரு கோடி யானை தந்தம் பறிமுதல் காரை துரத்தி மடக்கிய போலீசார்
ரூ.ஒரு கோடி யானை தந்தம் பறிமுதல் காரை துரத்தி மடக்கிய போலீசார்
ADDED : ஜன 01, 2025 12:39 AM

திருநின்றவூர்,திருவள்ளூரில் இருந்து காரில் யானை தந்தம் கடத்தி வருவதாக, சென்னை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருவள்ளூர் வனத்துறை போலீசார், அரண்வாயல் அருகே, நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த சிவப்பு நிற 'டொயோட்டா கிளான்சா' காரை நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் சென்றது. திருவள்ளூர் வனத்துறை போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். மர்ம நபர்கள் சென்ற கார், திருநின்றவூர் அருகே, சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவரை இடித்து தள்ளியது. இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போலீசார் பின் தொடர்வதை கண்ட மர்ம நபர்கள், திருநின்றவூர், கோமதிபுரம் அரசு பள்ளி அருகே, காரை நிறுத்தி இருவர் தப்பியோடினர்.
காரை சுற்றிவளைத்த வனத்துறை போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம், இஞ்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் உதயகுமார், 26, என்பவரை கைது செய்தனர்.
காரின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ எடையிலான மூன்று யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.