/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுங்குவார்சத்திரம் சந்திப்பில் ரவுண்டானா நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
/
சுங்குவார்சத்திரம் சந்திப்பில் ரவுண்டானா நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
சுங்குவார்சத்திரம் சந்திப்பில் ரவுண்டானா நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
சுங்குவார்சத்திரம் சந்திப்பில் ரவுண்டானா நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
ADDED : ஜன 30, 2025 12:15 AM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம், வாலாஜாபாத் -- மப்பேடு சாலைகள் இணையும் சுங்குவார்சத்திரம் சந்திப்பில், தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஜவுளி கடைகள் என, 300க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், பல்வேறு தேவைக்காக தினமும் சுங்குவார்சத்திரம் வந்துசெல்கின்றனர்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்துவருகின்றனர்.
இதனால், எப்போதும்மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் அதிகரித்துகாணப்படும்.
குறிப்பாக, காலை - மாலை நேரங்களில் சுங்கு வார்சத்திரம் சந்திப்பில்ஏற்படும் போக்குவரத்துநெரிசலால், வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது, விபத்துகளும்ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் நான்குமுனை சந்திப்பில், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் நெரிசல் மற்றும் விபத்தை தவிர்க்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம், வாலாஜாபாத் -- மப்பேடு சாலைகள் சந்திக்கும் பகுதியில், தற்காலிகமாக பேரிகார்டை வைத்து மாதிரி ரவுண்டானாவை சுங்குவார்சத்திரம் போலீசார் அமைத்துஉள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை, வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே வரவேற்பைபெற்றுள்ளது.

