/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடுமுறை கிடைக்காத விரக்தி; தற்கொலைக்கு முயன்ற போலீஸ்
/
விடுமுறை கிடைக்காத விரக்தி; தற்கொலைக்கு முயன்ற போலீஸ்
விடுமுறை கிடைக்காத விரக்தி; தற்கொலைக்கு முயன்ற போலீஸ்
விடுமுறை கிடைக்காத விரக்தி; தற்கொலைக்கு முயன்ற போலீஸ்
ADDED : ஜன 04, 2026 05:35 AM
குன்றத்துார்: விடுமுறை கிடைக்காத தால் விரக்தியடைந்த போலீஸ்காரர் தற் கொலைக்கு முயன்றார்.
குன்றத்துார் காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு போலீஸ்காரராக பணிபுரிபவர் ஏகநாத், 33. இவர் நேற்று, குன்றத்துார் இன்ஸ்பெக்டரிடம், தனக்கு விடுமுறை வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு, விடுப்பு தராத இன்ஸ்பெக்டர், பூந்தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணி முடிந்த பின், விடுமுறை எடுக்கலாம் என, ஏகநாத்திடம் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஏகநாத், வீட்டு கழிப்பறையில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.