/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
/
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
ADDED : மார் 01, 2024 11:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு, சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது.
அதன்படி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என, 731 மையங்களில் வழங்கப்பட உள்ளன.
மேலும், நடமாடும் குழுக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பல்வேறு இடங்களில், நாளை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

