/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு
/
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு
ADDED : டிச 24, 2024 12:28 AM

வாலாஜாபாத், வாலாஜாபாதில் 15 வார்டுகள் உள்ளன. 15வது வார்டில் பச்சையம்மன் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள அம்மன் கோவிலுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில், பக்தர்கள் வழிபாட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமீபகாலமாக, இத்தெருவின் இருபுறமும் ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சாலையோரங்களில் அதிகளவு கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
வாலாஜாபாத் பஜார் வீதியில் இறைச்சி கடை வைத்துள்ளோர், இங்கு வந்து கொட்டுவதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு கொட்டப்படும் இறைச்சி கழிவு களை, தெரு நாய்கள் இழுத்துவந்து சாலைகளில் போட்டு செல்கின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதோடு, மழை நேரங்களில் கோழி இறைச்சி கழிவு கலந்த நீர் சாலையில் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, இச்சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவுகள்கொட்டப்படுவதைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.