/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய பூவாத்தம்மன் கோவில் குளம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய பூவாத்தம்மன் கோவில் குளம்
குப்பை கொட்டும் இடமாக மாறிய பூவாத்தம்மன் கோவில் குளம்
குப்பை கொட்டும் இடமாக மாறிய பூவாத்தம்மன் கோவில் குளம்
ADDED : மே 15, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், பூவாத்தம்மன் கோவில் அருகே, அம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது. இக்குளம் அப்பகுதியில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தின் நீரை அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
அருகே உள்ள வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவை குளத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது, குப்பை கொட்டும் இடமாகவே குளம் மாறியுள்ளது.
இதனால், குளத்தின் நீர் மாசடைந்து ஏந்த தேவைக்காகவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், குளத்தின் நீர் துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சுகாதார சீர்கேட்டின் மையமாக விளங்கும், கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.