/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரின்டர் வசதி இல்லாததால் அஞ்சல் வாடிக்கையாளர்கள் அவதி
/
பிரின்டர் வசதி இல்லாததால் அஞ்சல் வாடிக்கையாளர்கள் அவதி
பிரின்டர் வசதி இல்லாததால் அஞ்சல் வாடிக்கையாளர்கள் அவதி
பிரின்டர் வசதி இல்லாததால் அஞ்சல் வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : ஜன 31, 2024 10:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்மற்றும் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, ஐந்து கவுன்டர்கள் இயங்கி வருகின்றன.
இதில், இரண்டு கவுன்டர்களில் மட்டுமே, பிரின்டர் வசதி உள்ளது. அதில், ஒரு கவுன்டர் காப்பீடு திட்ட வசதிக்குறியது.
இதனால், ஒரே கவுன்டரில் பணம் செலுத்தும் வசதி மற்றும் பதிவு தபால்கள் அனுப்ப வேண்டி உள்ளது.
ஒரு சாதாரண பதிவு தபால் அனுப்ப செல்வோர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஐந்து கவுன்டர்களிலும் பிரின்டர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை வைத்தனர்.