/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 22ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்
/
காஞ்சியில் வரும் 22ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 18, 2025 06:05 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வரும் 22ம் தேதி, அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 22ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
அஞ்சல் வாடிக்கையாளர் கள், ஏதேனும் குறைகள் இருந்தால், அஞ்சல் குறை தீர்க்கும் முகாம், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் கோட்டம் என்கிற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
குறிப்பாக, தனியார் கூரியர் மூலமாக அனுப்பப்படும் குறைகள் ஏற்கப்படமாட்டாது. மேலும், வரும் 22ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்கும், அஞ்சல் சேவை குறை தீர்வு முகாமில், நேரிலும் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

