தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் கோரி மனு

மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் கோரி மனு

மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் கோரி மனு


ADDED : மார் 14, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைகால நிவாரணம் வழங்கக்கோரி, திருக்காலிமேடைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

மனு விபரம்:

மண்பாண்ட தொழிலாளர்கள் மழைகாலத்தில் தொழில் செய்ய முடியாத சூழல் உள்ளதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2015 முதல், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாய் மழைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, ஆண்டுதோறும் மழைகால நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., இத்தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார். தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், இரு ஆண்டுகளாக தொடர்ந்து, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைகால நிவாரணம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், 2024ல், ஓய்வூதியம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் வாங்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைகால நிவாரண தொகையாக, 5,000 ரூபாயை, கதர் கிராம கைத்தொழில் வாரியத்தினர் நிறுத்திவிட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடில் உள்ள 10 பயனாளிகள் உட்பட, மாவட்டத்தில் 83 பேருக்கு மழைகால நிவாரணத்தை நிறுத்திவிட்டனர். இதனால், நிவாரணம் கிடைக்காதவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us