/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ADDED : ஜூலை 27, 2025 12:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:மாத்துாரில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது.
சுற்றுவட்டாரங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போர், தங்களின் அடிப்படை தேவைகளுக்காக இந்த சாலையை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தவிர, ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு பலர் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், வல்லக்கோட்டை, மாத்துார் பகுதிகளில் இயங்கிவரும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர்.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், குப்பையில் உணவு தேடி வரும் கால்நடைகள் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது.
எனவே, சாலையோரங்களில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.