/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் லாரியில் சிக்கி மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

ADDED : ஜூன் 05, 2025 02:02 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் உள்ள சாலையோரங்களில் மின்வாரியம் சார்பில், மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
இந்த மின்கம்பங்களில் செல்லும் மின்கம்பிகள் வாயிலாக, அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, விவசாய நிலங்களிலும் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்மோட்டார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள, திருப்புலிவனம் சாலையில் குறுக்கே செல்லும் மின் வழித்தடம் வாயிலாக, 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த மின்வழித்தட கம்பிகள், அவ்வழியே நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியில் சிக்கி அறுந்துள்ளது.
இதை அறிந்த அப்பகுதிவாசிகள் உடனே மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது.
தற்போதுவரை அறுந்த மின்கம்பிகள் சரி செய்யப்படாமல் இருப்பதால், மின்மோட்டாரை இயக்கி விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.
எனவே, நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி மோதி அறுந்த மின்கம்பிகளை சீரமைத்து, உடனே மின் இணைப்பு வழங்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.