ADDED : மார் 28, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 22ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆறாம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், இரவு வெள்ளி தேரோட்டமும் நடந்தது.
இதில், வெள்ளி தேரோட்டத்தை காண மாலையில் இருந்தே பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இந்நிலையில், மாலை 6:20 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.
கோவிலி ல் உள்ள நான்காம் பிரகாரம், மாவடி சன்னிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது. பின், பக்தர்கள் தங்களது மொபைல் போன் வெளிச்சத்தில் தட்டு தடுமாறி, படிகளை கடந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இரவு 9:00 மணியை கடந்தும் மின்விநியோகம் சீரமைக்கப்படாததால், பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
