/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பேரூராட்சியில் அமைகிறது ரூ.1.97 கோடியில் மின் மாயனம்
/
வாலாஜாபாத் பேரூராட்சியில் அமைகிறது ரூ.1.97 கோடியில் மின் மாயனம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் அமைகிறது ரூ.1.97 கோடியில் மின் மாயனம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் அமைகிறது ரூ.1.97 கோடியில் மின் மாயனம்
ADDED : மே 24, 2025 08:26 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், உயிர் நீத்தோர் சடலங்களை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரியம்மன் கோவில், சேர்க்காடு மற்றும் கீழாண்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மயானங்களில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த மயானங்கள் பாலாற்றங்கரையொட்டி உள்ளதால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு நேரங்களில் மண்ணில் புதைத்த சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலை உள்ளது.
அம்மாதிரியான சமயங்களில் தண்ணீர் மாசு அடைவதோடு பாலாற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் திறந்த வெளியில் எரிக்கப்படுவதால், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவோடு, காற்று மாசடைந்து, போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள மயானங்களில் இறந்தோர் நினைவாக கல்லறைகள் அதிகம் கட்டப்படுவதால், தொடர்ந்து இடம் பற்றாக்குறை பிரச்சனை நிலவுகிறது.
அதேபோன்று வாலாஜாபாத் சுற்றி உள்ள ஒட்டிவாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களிலும், மயானத்தில் இடம் பற்றாக்குறை பிரச்சினை உள்ளது.
இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்காக வாலாஜாபாத் பகுதியில் மின் மயானம் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலாஜாபாத் பேரூராட்சி வாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, வாலாஜாபாத் பேரூராட்சியில் மின் மாயனம் ஏற்படுத்த கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறவிப்பு வெளியானது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில் மின் மயானம் ஏற்படுத்த கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வாலாஜாபாத் 5வது வார்டு, வல்லப்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி துவங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.