/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புத்தக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
/
காஞ்சி புத்தக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 30, 2025 12:13 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில்,மூன்றாவது புத்தக திருவிழா, நாளை துவங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து புத்தக திருவிழா -2025 நடத்தப்பட உள்ளது.
இப்புத்தக திருவிழா தொடர்ந்து 11 நாட்கள்நடைபெறவுள்ளது. புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை நடைபெறும்.
இதில், தென்னிந்தியா முழுதும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1,000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகள், கலெக்டர் வளாகத்தில் தீவிரமாக நடக்கின்றன. புத்தக விற்பனைக்கு ஒரு அரங்கமும், கலைநிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரங்கமும் என,இரு பெரிய அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், உணவு விற்பனை கடைகள், தற்காலிக கழிப்பறைகள், மின்விளக்குகள் பொருத்தம், வாகனம் நிறுத்தஏற்பாடு, விளம்பர பதாகை அமைப்பதுஎன, பல்வேறு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.