/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண், தோட்டக்கலை பயிற்சி பெற்ற மாணவ -- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
/
வேளாண், தோட்டக்கலை பயிற்சி பெற்ற மாணவ -- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
வேளாண், தோட்டக்கலை பயிற்சி பெற்ற மாணவ -- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
வேளாண், தோட்டக்கலை பயிற்சி பெற்ற மாணவ -- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 27, 2025 11:49 PM
காஞ்சிபுரம்: பஞ்சுபேட்டையில் உள்ள அரசு எண்ணெய் வித்து பண்ணையில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை குறித்து பயிற்சி பெற்ற திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி மாணவ - மாணவியருக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேளாண்மை அறிவியல் தொழிற்கல்வி பயிலும் மாணவ - மாணவியரின் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில், வேளாண் ஆசிரியை சுவப்னா ஆகியோருடன் பண்ணை சுற்றுலா திட்டத்தின் கீழ், 10 நாட்கள், தோட்டக்கலை பயிற்சிக்காக பஞ்சுப்பேட்டை உள்ள அரசு எண்ணெய் வித்து பண்ணைக்கு சென்றனர்.
பண்ணையில், மண், விதை பரிசோதனை ஆய்வகம், வேளாண் கருவிகள், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை பார்வையிட்டனர். 10 நாட்களாக வேளாண்மை உதவி இயக்குநர் காளியம்மாள், தலைமையில், வேளாண் அலுவலர்கள், தோட்ட கலை அலுவலர்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த களப்பயிற்சி அளித்தனர்.
இதில், குழித்தட்டு வாயிலாக நாற்று உற்பத்தி, மண் புழு உரம் தயாரித்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பம், இயற்கை உரம் தயாரித்தல், சூரிய கூடார உலர்த்தி வாயிலாக வேர்க்கடலை, உளுந்து ஆகியவற்றை உலர்த்துதல், முருங்கை இலை பொடி தயாரித்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

