/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்
/
மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்
மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்
மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்
ADDED : ஜூன் 06, 2025 02:11 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக தினமும், 2,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மருத்துமனைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு ஓ.பி., சீட்டு எனப்படும் புறநோயாளி அனுமதி சீட்டு கணினியுடன் இணைக்கப்பட்ட பிரின்டர் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரு வாரமாக பிரின்டர் பழுதடைந்ததுள்ளதால், புறநோயாளி அனுமதி சீட்டை, மருத்துவமனை ஊழியர்கள், கைகளால் எழுதி கொடுப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் நோயாளிகளும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் புறநோயாளி சீட்டு வழங்கும் பிரிவில் உள்ள பழுதடைந்த நிலையில் பிரின்டரை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓ.பி.சீட்டு வழங்கும் மிடத்தில், பழுதடைந்த பிரின்டரை சீரமைக்க ஏற்கனவே டெக்னீஷியனிடம் தெரிவித்துள்ளோம்.
பிரின்டர் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.