/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் மீது லாரி மோதி தனியார் ஊழியர் பலி
/
பைக் மீது லாரி மோதி தனியார் ஊழியர் பலி
ADDED : நவ 08, 2024 09:46 PM
திருவேற்காடு:போரூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 38. இவர், நசரத்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை நிமித்தமாக தன் 'பஜாஜ் சிடி100' பைக்கில், நேற்று மாலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் லாரி மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்முருகன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து ஏற்படுத்தி லாரி நிறுத்தாமல் சென்ற ஓட்டுனர் குறித்து விசாரிக்கின்றனர்.