/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேச்சு போட்டி எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரிக்கு பரிசு
/
பேச்சு போட்டி எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரிக்கு பரிசு
ADDED : நவ 07, 2024 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவையொட்டி, வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு பயிலும் மாணவி பா.வளர்மதி ‛தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்' என்ற தலைப்பில் பேசி, பேச்சு போட்டியில் முதல் பரிசை வென்றார்.
பரிசு வென்ற மாணவி வளர்மதியை, கல்லுாரி முதன்மையர் வி.ராஜகோபாலன், முதல்வர் கி.திருமாமகள், கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.