/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பாக்கத்தில் கபடி போட்டி வென்ற அணிக்கு பரிசு
/
கரும்பாக்கத்தில் கபடி போட்டி வென்ற அணிக்கு பரிசு
ADDED : ஜன 31, 2024 09:56 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், கபடி விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து, 55 கிலோ எடைக்கு உட்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டி நடத்தினர்.
கடந்த 26ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில், கரும்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 32 அணியினர் பங்கேற்றனர். அகில இந்திய விதிமுறைகளின் படி போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவாக கரும்பாக்கம்- தண்டரை அணிகள் இடையே நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டி நடந்தது.
இதில், தண்டரை கிராம அணி வெற்றி பெற்று முதல் பரிசு தட்டி சென்றது. முதல் பரிசாக 15,000 ரூபாய் மற்றும் 7 அடி கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற கரும்பாக்கம் அணிக்கு, 10,000 ரூபாய் மற்றும் 6 அடி கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.