/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செஸ் போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
/
செஸ் போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
செஸ் போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
செஸ் போட்டியில் வென்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு
ADDED : செப் 03, 2025 01:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில் நடந்த மாவட்ட அளவில், பள்ளி மாணவ - மாணவியருக்ககான செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 9, 11, 13, 17 வயதுடைய பள்ளி மாணவ - மாணவியர் என, ஒவ்வொரு பிரிவிலும், ஆண்கள், பெண்கள் என, தனித்தனியாக நடந்த போட்டியில், 230 பேர் பங்கேற்றனர்.
இதில், நான்கு பிரிவாக நடந்த போட்டியை சதுரங்க கழக தலைவர் அப்துல் ஹமீது துவக்கி வைத்தார். இதில், ஆண்கள் பிரிவில் 20 பேர், பெண்கள் பிரிவில் 15 பேர் என, முதலிடம் பிடித்தவர்களுக்கு கோப்பையும், பரிசும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் டாக்டர் பி.துவாரகநாத், காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலர் வே.ஜோதிபிரகாசம் ஆகியோர் பரிசு வழங்கி மாணவ - மாணவியரை பாராட்டினர்.