மூடாமல் எடுத்து செல்லும் குப்பை லாரிகளால் சிரமம்
மூடாமல் எடுத்து செல்லும் குப்பை லாரிகளால் சிரமம்
ADDED : மார் 05, 2026 05:37 AM

காஞ்சிபுரம்: குப்பை எடுத்து செல்லும் லாரிகள் மீது, வலை போட்டு மூடாததால், வாகன ஓட்டிகள்சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை டிராக்டர்கள், லாரிகள் மூலமாக அள்ளி சென்று, பல்வேறு பகுதிகளில் தரம் பிரிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரதான சாலைகளில் குப்பை அள்ளி செல்லும் வாகனங்களின் மீது, வலை போட்டு மூடாமல் எடுத்து செல்கின்றனர்.
குறிப்பாக, நேற்று காலை, காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலையில், குப்பை எடுத்து செல்லும் எய்ச்சர் லாரி மீது தடுப்பு வலை போடாமல் குப்பை எடுத்து செல்கின்றனர்.
இந்த குப்பை காற்றில் பறந்து, குப்பை வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. மேலும், துர்நாற்றத்தை நுகர்ந்துக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, பிரதான சாலைகளில் செல்லும் குப்பை லாரிகள் மீது, வலை போட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
