/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் செடிகள் தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
கால்வாயில் செடிகள் தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : ஜூன் 05, 2025 02:14 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற, தெருக்களில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலவாக்கம் செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய், முறையாக பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து உள்ளன.
இதனால், கால்வாயில் தண்ணீரானது தடையின்றி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், மழைநேரங்களில் வெளியேற வேண்டிய மழைநீரானது அங்கேயே தேங்கி குடியிருப்பு பகுதிகளை சூழும் நிலை ஏற்படுகிறது.
வடிகால்வாயில் செடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளதால், கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
எனவே, செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.