ADDED : செப் 26, 2026 09:21 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலையில், ‛பிரகாசமான எதிர்காலத்திற்கான மாணவ – மாணவியரின் புதுமை படைப்புகள், என்ற தலைப்பில், ‛புராஜெக்ட் எக்ஸ்போ –- 2026 நேற்று நடந்தது. காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலையில் நேற்று நடந்த ‛பிரகாசமான எதிர்காலத்திற்கான மாணவ – மாணவியரின் புதுமை படைப்புகள், என்ற தலைப்பில் நடந்த, ‛புராஜெக்ட் எக்ஸ்போ’விற்கு பல்கலை துணைவேந்தர் ஸ்ரீனிவாசு, இணை துணைவேந்தர் வசந்த குமார் மேத்தா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி நடந்த எக்போவில், செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், வேளாண்மை, சுகாதார அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற முக்கிய துறைகளில் மாணவ – மாணவியர் தங்களின் புதுமையான படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
