/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எரிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி போராட்டம்
/
எரிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி போராட்டம்
எரிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி போராட்டம்
எரிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி போராட்டம்
ADDED : ஜன 25, 2025 02:57 AM

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், 24. விஜயகணபதி, 22. கடந்த 16ம் தேதி திருமால்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, திருமால்பூர் காலனியைச் சேர்ந்த பிரேம்குமார், 22, உள்ளிட்ட சிலர், தமிழரசன், விஜயகணபதி ஆகியோரை தாக்கி விட்டு, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.
தீக்காயமடைந்தோரை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், விஜயகணபதி, தமிழரசன் ஆகிய இருவரில், தமிழரசன் கடந்த 22ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, பிரேம்குமார், வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.
நேற்று காலை பா.ம.க., யாதவ அமைப்பினர் மற்றும் கிராமவாசிகள் நெமிலி சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழரசன் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். 'ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட வேண்டும்' என, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.