ADDED : ஜன 03, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜவேலு தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே, காவலான் கேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி, முழக்கங்களை எழுப்பினர். மக்கள் நலப்பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர்.