/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் வழங்கல்
ADDED : மார் 15, 2025 06:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சியில் உள்ள காரணை மண்டபம் கிராமத்தில், உலக மகளிர் தினவிழா ஊராட்சி தலைவர் கீதா தலைமையில் நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, துணை தாசில்தார் கலைவாணி முன்னிலை வகித்தனர். அதில், பள்ளி மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பெண்களின் முன்னேற்றம் குறித்து சிறப்பு பிரமுகர்கள் பேசினர். பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி துணைத் தலைவர் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.