தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 2,831 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்

 2,831 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்

 2,831 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்


ADDED : ஜன 29, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'உலகம் உங்கள் கையில் திட்டம்' சார்பில், 2,831 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகளை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு கல்லுாரிகளான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள் என, 88 கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ- - மாணவியர் 11,649 பேருக்கு மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கடந்த 5ம் தேதி, 2,629 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, 22 கல்லுாரிகளைச் சேர்ந்த, 2,831 மாணவ - மாணவியருக்கு, மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us