/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்
/
மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்
ADDED : நவ 25, 2024 01:44 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில், சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழாவையொட்டி, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சர்வம் ஃபினான்சியல் இன்குளுசன் டிரஸ்ட் சத்திய சாய் ஆர்கனைசேஷன் சார்பில், 99 மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் வெங்கடேசன், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
களக்காட்டூர் ஊராட்சி தலைவர் நளினி, விழாவை துவக்கி வைத்தார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், 99 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.