/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்
ADDED : ஏப் 17, 2025 10:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் ஆகியோர், கலெக்டரிடம் 106 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியிடம் வழங்கி அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, 11 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- - மாணவியர்க்கு, 5.3 லட்சம் ரூபாய் மதிப்பில், பேச்சு பயிற்சி உபகரணங்களும், நான்கு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 4.1 லட்சம் ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

