/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை வழங்கல்
/
ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை வழங்கல்
ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை வழங்கல்
ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை வழங்கல்
ADDED : அக் 04, 2024 07:40 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் சரவணன், 20. இவர், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தபால் துறையில் செயல்படுத்தப்படும், 399 ரூபாய்க்குரிய விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம், அவர் விபத்தில் இறந்தார். அவருக்கு சேர வேண்டிய காப்பீடு தொகைக்குரிய, 10 லட்ச ரூபாய் நேற்று வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று நடந்த விபத்து இழப்பீடு தொகை விழாவிற்கு, கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தலைமை வகித்தார்.
சரணவனின் தந்தை சம்பத்குமாரிடம், 10 லட்ச ரூபாய்க்குரிய காசோலை வழங்கினார். இதில், இந்தியன் போஸ்டல் பேங்க் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.