/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொது விநியோக குறைதீர் கூட்டம் 213 மனுக்கள் மீது உடனடி தீர்வு
/
பொது விநியோக குறைதீர் கூட்டம் 213 மனுக்கள் மீது உடனடி தீர்வு
பொது விநியோக குறைதீர் கூட்டம் 213 மனுக்கள் மீது உடனடி தீர்வு
பொது விநியோக குறைதீர் கூட்டம் 213 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ADDED : ஏப் 12, 2025 06:47 PM
காஞ்சிபுரம்:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான பொதுவிநியோக குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் கீழம்பி கிராமம், உத்திரமேரூரில் நெய்யாடுபாக்கம், வாலாஜாபாதில் திருவங்கரணை, ஸ்ரீபெரும்புதுாரில் எறையூர், குன்றத்துாரில் கரசங்கால் என, ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.
இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 235 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 213 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள 22 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.

