/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பொது நுாலகம் இடமாற்றம்
/
உத்திரமேரூரில் பொது நுாலகம் இடமாற்றம்
ADDED : ஜூலை 17, 2025 09:40 PM
உத்திரமேரூர்:-உத்திரமேரூரில், பொது நுாலகம் இடமாற்றம் செய்யப்பட்டு வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சி, சக்கரம் கோதண்டராம ஐயர் தெருவில் பொது நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், 25,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
கடந்த 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கட்டட கூரை சேதமடைந்து மழை நேரங்களில் தண்ணீர் கீழே சொட்டுகிறது.
அப்போது, நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. எனவே, புதிய கட்டடம் கட்டும் வரை நுாலகம் வேறொரு இடத்தில் செயல்பட, வாசகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, பொது நுாலகம் அதே பகுதியில் உள்ள வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை வாசகர்களுக்கு தெரிவிக்கும்பொருட்டு, 'நுாலகம் எதிரே உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது' என, நூலக நிர்வாகம் சார்பில், பழைய நுாலக கதவில் எழுதப்பட்டுள்ளது.

