/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரும்புலியூர் ஊராட்சியில் பொது குளங்கள் சீரமைப்பு
/
அரும்புலியூர் ஊராட்சியில் பொது குளங்கள் சீரமைப்பு
ADDED : பிப் 17, 2025 01:24 AM

அரும்புலியூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்புலியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில், அரும்புலியூர், சீத்தாவரம், கரும்பாக்கம், காவணிப்பாக்கம், பேரணக்காவூர், மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஊராட்சி கிராமங்களில், 15க்கும் மேற்பட்ட பொதுக்குளங்கள் உள்ளன.
இக்குளங்களில், கடந்த பருவ மழைக்காலத்தின் போது போதுமான அளவுக்கு தண்ணீர் சேகரமாகி காணப்படுகிறது.
இதையடுத்து, தற்போது இந்த குளங்களில் கரை பலப்படுத்துதுல் மற்றும் புதர்கள் அகற்றி சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொதுக்குளத்தை பராமரித்தல் மற்றும் குளக்கரையை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட புதர்கள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் வாயிலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.