UPDATED : ஜூன் 14, 2026 04:25 PM
ADDED : ஜூன் 14, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட, மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும், செய்தி - மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, துறை இயக்குனர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திர பிரபு, மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தின் செய்தி துறை தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான செய்தி - மக்கள் தொடர்பு அலுவலராக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து, அசோக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
