/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுடுகாடு வசதி இல்லாமல் புதுப்பேட்டை பகுதியினர் அவதி
/
சுடுகாடு வசதி இல்லாமல் புதுப்பேட்டை பகுதியினர் அவதி
சுடுகாடு வசதி இல்லாமல் புதுப்பேட்டை பகுதியினர் அவதி
சுடுகாடு வசதி இல்லாமல் புதுப்பேட்டை பகுதியினர் அவதி
ADDED : மார் 28, 2025 08:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை ஊராட்சியில், புதுப்பேட்டை துணை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில், நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இருப்பினும் சுடுகாடு வசதி மட்டும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
இதனால், திம்மையன்பேட்டை கிராம சுடுகாடு அருகே எரிக்கவும், புதைக்கவும் செய்ய வேண்டி உள்ளது.
எனவே, ஏகனாம்பேட்டை ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, புதுப்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர் கூட்டத்திலும் மனு அளித்துள்ளனர்.