/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பெருமாள் கோவிலில் கழிப்பறை பூட்டப்பட்டதால் தவிப்பு
/
பழையசீவரம் பெருமாள் கோவிலில் கழிப்பறை பூட்டப்பட்டதால் தவிப்பு
பழையசீவரம் பெருமாள் கோவிலில் கழிப்பறை பூட்டப்பட்டதால் தவிப்பு
பழையசீவரம் பெருமாள் கோவிலில் கழிப்பறை பூட்டப்பட்டதால் தவிப்பு
ADDED : ஜன 30, 2025 11:42 PM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் உள்ளது.
அப்பகுதி மலை மீதுள்ள இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவில் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால், சிறப்பு வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.
இதனால், காஞ்சி நகர் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் இக்கோவிலுக்கும் வந்து வழிபட்டு செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, மலையடிவாரத்தில், ஏற்கனவே கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை எப்போதும் பூட்டி வைக்கப்பட்டு, காட்சிப்பொருளாக காணப்படுகிறது.
இதனால், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பழையசீவரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில், பக்தர்கள் நலன் கருதி கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

