/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைதாகி 50வது முறை சிறை சென்ற புளியந்தோப்பு ரவுடி
/
கைதாகி 50வது முறை சிறை சென்ற புளியந்தோப்பு ரவுடி
கைதாகி 50வது முறை சிறை சென்ற புளியந்தோப்பு ரவுடி
கைதாகி 50வது முறை சிறை சென்ற புளியந்தோப்பு ரவுடி
ADDED : நவ 26, 2025 03:42 AM
சென்னை: தொடர் குற்ற வழக்கில் சிக்கிய ரவுடி, 50வது முறையாக சிறையில் அடைக்கப்பட்டார்.
புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சையத்சமீர், 27, என்ற நபரை தாக்கிய வழக்கில், கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த இளம்பரிதி என்கின்ற டைகர் ராஜாத்தி, 38, என்ற சரித்திர பதிவேடு ரவுடியை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே, 49 குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 50வது முறையாக நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல, புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜோஸ்வா, 25. இவரை, கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் மற்றும் ரவி ஆகியோர் தாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு, 27, என்ற நபரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

