/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஹா தீப்பாஞ்சி அம்மனுக்கு புற்று மாரியம்மன் அலங்காரம்
/
மஹா தீப்பாஞ்சி அம்மனுக்கு புற்று மாரியம்மன் அலங்காரம்
மஹா தீப்பாஞ்சி அம்மனுக்கு புற்று மாரியம்மன் அலங்காரம்
மஹா தீப்பாஞ்சி அம்மனுக்கு புற்று மாரியம்மன் அலங்காரம்
ADDED : செப் 05, 2025 02:03 AM

காஞ்சிபுரம்:ஆவணி திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் பல்லவர்மேடு மஹா தீப்பாஞ்சியம்மன் புற்று மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு வ.உ.சி., தெருவில் மஹா தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் நேற்று ஆவணி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், கச்சபேஸ்வரர் கோவில் அருகில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், மஹா தீப்பாஞ்சியம்மன் கோவில் வந்தடைந்தது.
அதை தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு, 108 பாலாபிஷேகம் மற்றும் பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் மஹா தீப்பாஞ்சி அம்மன் புற்று மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி சங்கர் சாமி செய்திருந்தார்.