/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்
/
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்
ADDED : டிச 18, 2025 06:04 AM
காஞ்சிபுரம்: சீதா ராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு, ராதா கல்யாண மகோத்சவம், வரும் 21ம் தேதி, காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் நடைபெற உள்ளது.
சீதா ராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில், ராதா கல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 33வது ஆண்டு மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, உத்சவத்தையொட்டி நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையும் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு தாசர் கீர்த்தனையும், மாலை 6:00 மணிக்கு பூஜை, திவ்யநாமமும், இரவு 10:00 மணிக்கு டோலோத்சவமும் நடக்கிறது.
வரும் 21ம் தேதி, காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ராதா கல்யாண மகோத்சவமும், மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உத்சவமும் நடக்கிறது.
ராதா கல்யாண மகோத்சவ நிகழ்ச்சிகளை, பிரும்மஸ்ரீ கடயநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவினர் நடத்துகின்றனர்.

