/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் ரயில்வே பணிகள் விரிவாக்கம்
/
வாலாஜாபாதில் ரயில்வே பணிகள் விரிவாக்கம்
ADDED : ஆக 18, 2025 01:45 AM

காஞ்சிபுரம்;வாலாஜாபாத் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக, கூடுதல் தண்டவாளம் மற்றும் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, மின்சார ரயில் வழித்தடம் செல்கிறது.
இதில், வாலாஜாபாத் ரயில் நிலையத்தில், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்டபல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும், இருசக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் கார் முனையம் இயங்கி வருகிறது.
முதலாவது, இரண்டாவது நடைமேடைகளில், பயணியர் மின்சார ரயில்கள் செல்வதற்கும், மூன்றாவது நடைமேடையில் கார் முனையத்தில் நிறுத்தப்படும் கார்கள், இருசக்கர வாகனங்கள் ஏற்றி செல்வதற்கும், தண்டவாளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் கார் முனையத்திற்கு வந்து விடுவதால், சரக்கு ரயில் ஒன்றை, இரண்டாவது நடைமேடையில் காத்திருக்க வைக்க வேண்டி உள்ளது.
இந்த நடைமேடையில் காத்திருக்கும் சரக்கு ரயிலில், கார்களை ஏற்ற முடியாது. மூன்றாவது நடைமேடையில் இருக்கும் சரக்கு ரயில் கிளம்பி சென்றால் மட்டுமே அடுத்த ரயிலை நிறுத்த முடியும்.
இந்த சிரமத்தை தவிர்க்க, வாலாஜாபாத் ரயில் நிலையத்தில், நான்காவது நடை மேடைக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த கார் முனையத்திற்கு, ஒரே நேரத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் வந்தால், நிறுத்துவதற்கு ஏற்ப வசதி செய்யப்பட உள்ளது.
மேலும், புதிய அலுவலக கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது என, ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.