/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைக்கு சேதமான பொன்னேரிக்கரை சாலை சீரமைப்பு
/
மழைக்கு சேதமான பொன்னேரிக்கரை சாலை சீரமைப்பு
ADDED : டிச 04, 2024 12:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்தில் இருந்து சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இருவழி சாலை 1,600 மீட்டர் நீளமுடையது.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை மற்றும் வேலுார் மார்க்கத்தில் செல்லும் டூ வீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனஙகள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.
மாவட்டத்தின் முக்கிய சாலையாகவும், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் சமீபத்தில் ‛பெஞ்சல்' புயயின்போது பெய்த கனமழைக்கு சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், உயர்ரக தார்கலவை வாயிலாக சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக நேற்று சீரமைத்தனர்.