/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு
/
மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு
மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு
மழையால் சேதமான சாலைகள் ஸ்ரீபெரும்புதுாரில் சீரமைப்பு
ADDED : டிச 02, 2024 02:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:வங்கக்கடலில் உருவான ‛பெஞ்சல்' புயலால், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம், காலை முதல், மாலை வரை சராசரியாக 13 செ.மீ., மழை பெய்தது.
ஸ்ரீபெரும்துார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த தொடர் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அதேபோல, ஸ்ரீபெரும்பதுார் - குன்றத்துார் சாலை, மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து, மழையால் சேதமான சாலையினை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், கச்சிப்பட்டு, பட்டுநுால்சத்திரம் பகுதிகளில், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சீரமைப்பு பணி நடந்து வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.