/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொளப்பாக்கம் பூங்காவில் மீண்டும் மழைநீர் தேக்கம்
/
கொளப்பாக்கம் பூங்காவில் மீண்டும் மழைநீர் தேக்கம்
ADDED : ஜன 11, 2024 12:12 AM

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில், ராமமூர்த்தி அவென்யூவில் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, பொதுமக்கள் நடைபயிற்சி சென்றும், பொழுது போக்கியும் பயனடைந்தனர். சிறுவர்கள் அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் போது, இந்த பூங்காவில் 20 நாட்களுக்கு மேல் மழைநீர் தேங்கி நின்று அதன்பின் வடிந்தது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கன மழையில் மீண்டும் பூங்கா மற்றும் அதன் அருகே உள்ள சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் மீண்டும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
மழை பெய்தாலே ராமமூர்த்தி அவென்யூ பூங்கா மற்றும் சாலையில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும், கொளப்பாக்கத்தில் முறையான வடிகால்வாய் இல்லாததால் மழையின் போது பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழைநீர் விரைவாக வடியும் வகையில் போதிய கால்வாய்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.