/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் செவிலிமேடில் கொசு தொல்லை
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் செவிலிமேடில் கொசு தொல்லை
காலி மனையில் மழைநீர் தேக்கம் செவிலிமேடில் கொசு தொல்லை
காலி மனையில் மழைநீர் தேக்கம் செவிலிமேடில் கொசு தொல்லை
ADDED : அக் 23, 2025 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலிமேடு: காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு வடிவேல் நகரில், காலி மனை மற்றும் தெருவில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, வடிவேல் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காலி மனையிலும், தெருவிலும் குட்டைபோல மழைநீர் தேங்கி வருகிறது .
இதனால், கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.