/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பண்ருட்டியில் மின்கம்பத்தை அகற்றாமல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்

ADDED : அக் 13, 2025 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சியில், மின் கம்பத்தை அகற்றாமல், மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ருட்டி ஊராட்சி, பஜனை கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பஜனை கோவில் தெருவில் ஐந்து மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது.
ஆனால், கால்வாய் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக வெளியேற வழியில்லாமல் கால்வாயில் தேங்கும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைநீர் கால்வாயில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.