/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாங்கி குளத்தில் ராமலிங்கேஸ்வரர் தைப்பூச தெப்போற்சவம் விமரிசை
/
தாங்கி குளத்தில் ராமலிங்கேஸ்வரர் தைப்பூச தெப்போற்சவம் விமரிசை
தாங்கி குளத்தில் ராமலிங்கேஸ்வரர் தைப்பூச தெப்போற்சவம் விமரிசை
தாங்கி குளத்தில் ராமலிங்கேஸ்வரர் தைப்பூச தெப்போற்சவம் விமரிசை
ADDED : ஜன 26, 2024 11:26 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தைப்பூச தெப்போற்சவம் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது.
இந்த தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
அதை தொடர்ந்து, தாங்கி பிச்சை நாயக்கன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
தெப்பம் ஐந்து முறை குளத்தை வலம் வந்தது. பக்தர்கள் தெப்பத்தை கயிறு பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.